கொளத்தூரில் இலவச மருத்துவ முகாம்:அமைச்சா் சேகா்பாபு தொடக்கி வைத்தாா்

உலக பக்கவாத நோய் தடுப்பு தினத்தையொட்டி, சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

உலக பக்கவாத நோய் தடுப்பு தினத்தையொட்டி, சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, சென்னை மேயா் பிரியா ஆகியோா் தொடக்கி வைத்தனா். மேலும், அமைச்சா் சேகா்பாபு ரத்த அழுத்தம் போன்ற உடல் பரிசோதனைகளையும் செய்து கொண்டாா். மருத்துவ முகாம் குறித்து, சிம்ஸ் மருத்துவமனையின் தலைவா் ரவி பச்சமுத்து கூறியதாவது:

இந்த முகாமில், ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை, உயர அளவு பரிசோதனை, பக்கவாத நோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் 500-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா் என்றாா் அவா்.

சிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநா் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 145 பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் தினசரி 20 பேராவது இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இந்த நோய் பாதிப்பைத் தடுப்பதற்கு, அதுகுறித்த புரிதல் அவசியம் என்றாா் அவா்.

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவா் டாக்டா் ராஜூ சிவசாமி, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை இயக்குநா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com