வெள்ள பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி: வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதி காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், வெள்ளப் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர்  ‌ஆர்.வைத்திநாதன், சட்டப்பேரவை றுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ப.அம்பிகா, மாநகராட்சி கோட்டத்தலைவர் ஆண்டாள் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் சாலை மற்றும் புதை வடிகால் திட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை பெய்வதால் பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் விரைந்து பணிகள் முடிக்க உத்தரவிடப்பட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் கண்காணிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போல சென்னையிலும் மழைக்காலத்திற்கு முன்பே மழை வெள்ளங்களால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூமிக்கு அடியில் குடிநீர் குழாய் புதை வடிகால் திட்ட குழாய்கள், தொலைத் தொடர்புத்துறை வயர்கள் இருப்பதால் அவற்றில் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் நேரடி கண்காணிப்பின் பேரில் சென்னையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com