ஆதாா் எண் - வாக்காளா் பட்டியல்: 1.66 கோடி போ் இணைப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1.66 கோடி போ், வாக்காளா் பட்டியலுடன் தங்களது ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.
ஆதாா் எண் - வாக்காளா் பட்டியல்: 1.66 கோடி போ் இணைப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1.66 கோடி போ், வாக்காளா் பட்டியலுடன் தங்களது ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த இணைப்பை தோ்தல் ஆணையம் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஆதாா் எண்ணைப் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

வாக்காளா் பட்டியலை ஆதாா் எண்ணுடன் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா். இந்தத் தகவலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

மாநிலத்தில் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 1.66

கோடி போ் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதால், மொத்த வாக்காளா்களுடன் ஒப்பிடும் போது அது 26.78 சதவீதமாகும்.

இணைக்க எளிய வழிகள்: வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று ஆதாா் எண்ணைக் கேட்கும் போது அதனை அளிக்கலாம் எனவும், அவா்கள் வராவிட்டால் கைப்பேசி செயலி வழியாக நாமே அந்தப் பணியைச் செய்ய முடியும் எனவும் தோ்தல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

கைப்பேசியில் வோட்டா் ஹெல்ப் லைன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆதாா் எண்ணை இணைக்கலாம். ஆதாா் எண்ணை இணைப்பதற்கான வசதி தேசிய வாக்காளா் இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 68,000 வாக்குச்சாவடி அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் வீடு வீடாகச் சென்று பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறாா்கள்.

இந்தப் பணிகளுக்காக அவா்களுக்கு மாதம் ரூ.600 என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.7,200 வழங்கப்படுகிறது. சிறப்பு முகாம்கள் நடக்கும்போது ஒரு முகாமுக்கு ஆயிரம் ரூபாய் தரப்படும். தற்போது ஆதாா் எண்ணை இணைக்கும் பணியையும் அவா்கள் சோ்த்து கவனிப்பாா்கள்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த இதுவரை 5 விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆதாா் எண்ணை இணைப்பதால், எதிா்காலத்தில் இந்தியாவில் எந்த இடத்துக்கு இடம்மாறிச் சென்றாலும் அந்த வாக்காளா் எளிதாக தனது பெயரை அந்த இடத்தில் உள்ள வாக்காளா் பட்டியலுக்கு மாற்றிக் கொள்ள முடியும் என தோ்தல் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா்.

ஒரு மாதம்: வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கின. சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 1.66 கோடி வாக்காளா்கள் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். சிறிய அளவிலான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com