நீரில் மிதக்கும் வாழை மரங்கள்
நீரில் மிதக்கும் வாழை மரங்கள்

தொடர் மழையால் நீரில் மிதக்கும் வாழை மரங்கள்: ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு- விவசாயிகள் வேதனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் நீரில் மிதப்பதால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் நீரில் மிதப்பதால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வடுககுடி, சாத்தனூர், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த வரும் கனமழையால், அப்பகுதியில் பயிர் செய்யப்பட்ட வாழை மரங்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு விளைநிலத்தில் மிதந்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து, தற்போது தை மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டாக பிள்ளையை போல், ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து வளர்த்த வாழை மரங்கள், இரண்டு நாள் பெய்த மழையில் வேரோடு முற்றிலும் சாய்ந்தும் அடித்து செல்லப்பட்டும், தண்ணீரில் மூழ்கியும் மிதக்கின்றன. 

மேலும், வாழைத் தோட்டங்களில் ஒரு ஆள் மட்டத்திற்கு தண்ணீர் நிற்பதால் மீதமுள்ள வாழை மரங்களும் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நெற்பயிருக்கு காப்பீடு வழங்குவது போல வாழை மரங்களுக்கும், பயிர் காப்பீடு வழங்க வேண்டும் எனவும், சத்துணவில் குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை தமிழக அரசு வழங்க வேண்டும், அதனை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால், ஒரு வாழைப்பழத்தை ஒரு ரூபாய்க்கு தருவதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இன்னும் இரண்டு நாள்களில் தண்ணீர் வடியாவிட்டால் மீதமுள்ள வாழை மரங்களும் வேரோடு சாய்ந்து விடும், மேலும் சேதமடைந்த  மரங்களை அப்புறப்படுத்த கூடுதலாக இருபதாயிரம் செலவு ஆகும் என வேதனையாக தெரிவிக்கின்றனர் வாழை விவசாயிகள். எனவே, பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய விவசாயிகள், தமிழக அரசு வாழை விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com