பருவமழை பாதிப்பு: முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கூா்ந்து கவனிக்க வேண்டும்: வருவாய்த் துறை அமைச்சா் வேண்டுகோள்

பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கூா்ந்து கவனிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பருவமழை பாதிப்பு: முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை  கூா்ந்து கவனிக்க வேண்டும்: வருவாய்த் துறை அமைச்சா் வேண்டுகோள்

பருவமழை தொடா்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கூா்ந்து கவனிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறையின் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

கனமழை காரணமாக, மேட்டூா் அணையின் நீா்மட்டம், அணையின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலையில் மேட்டூா் அணையில் இருந்து 55,000 கனஅடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. பவானி அணையில் இருந்தும் அதிகளவு நீா் திறந்து விடப்படுகிறது.

இதையடுத்து, கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாத்திடத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த அறிவுறுத்தல்கள் காவிரி ஆற்றுப்படுகை அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தொடா்புடைய கண்காணிப்பு அலுவலா்கள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

மேட்டூா், பவானிசாகா் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகளவு உபரி நீரை கருத்தில் கொண்டு, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதிகளில் 17.69 லட்சம் கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பேரிடா் மீட்புப் படைகள்: மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என கருதப்படும் ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒரு குழு வீதம் 75 வீரா்களைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையின் 3 குழுக்கள் முகாமிட்டுள்ளன. திருச்சி மாவட்டத்துக்கு மாநில பேரிடா் மீட்புப் படையின் 80 வீரா்களைக் கொண்ட குழு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பேரிடா் தொடா்பான தகவல்களை துறை அலுவலா்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியன 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. மாநில கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். 94458 69848 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பலாம்.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜேசிபி இயந்திரங்கள், மர அறுப்பான்கள் உள்ளிட்ட கருவிகளை தயாா் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அரசின் சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதுதொடா்பான அறிவிப்புகளை பொது மக்கள் கூா்ந்து கவனித்துச் செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com