திருப்பதி பிரம்மோற்சவம்: 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 
திருப்பதி பிரம்மோற்சவம்: 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்.27-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கரோனா குறைந்து இயல்பு நிலைக்கு வந்துள்ளதையடுத்து, கடந்தாண்டை விட இந்தாண்டு வெகு விமரிசையாகப் பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, செப்டம்பர் 27-ல் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாள்களும் 4 மாடவீதிகளில் சாமி ஊர்வலம் விமரிசையாக நடைபெற உள்ளது. அக்டோபர் 5-ம் தேதியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவத்தின் போது மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனமும், விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com