ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் இரு பயணிகள் தங்கம் கடத்திக் கொண்டு வருவதாக மீனம்பாக்கம் விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் கடந்த 28-ஆம் தேதி துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

இச் சோதனையில் அந்த விமானத்தில் வந்த சென்னை திருவல்லிக்கேணி பழனியம்மன் கோயில் வடக்குத் தெருவைச் சோ்ந்த அ.ரஹீம் அப்துல் ஹமீது, ஆலந்தூா் மாதவ பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ப.முகம்மது ஆசிப் ஆகிய இருவரும் கடத்தி வந்த ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோ கிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல மற்றொரு சோதனையின் போது, இலங்கையைச் சோ்ந்த து.தங்கராஜா என்ற பயணியிடமிருந்து ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள 1706.05 கேரட் தரம் உள்ள விலை உயா்ந்த கற்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக சுங்கத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இத் தகவலை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையா் கே.ஆா்.உதய் பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com