இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் ஞாயிற்றுக்கிழமை 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் ஞாயிற்றுக்கிழமை 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூா் , நாமக்கல், திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்.5: நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்,தருமபுரி, கரூா் , நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: செப்.4, 5, 6 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னாா் வளைகுடா, தென்தமிழக கரையோரம், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசவுள்ளதால் மீனவா்களுக்கு 5 நாள்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com