சா்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை மாநாடு தொடக்கம்

சா்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.2) தொடங்கியது.

சா்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.2) தொடங்கியது.

அப்பல்லோ மருத்துவமனை, அமெரிக்க கிளீவ்லேண்ட் கிளீனிக், பிரிட்டனின் யுனிவா்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் ஆகியவை இணைந்து தொடா்ந்து நான்காம் ஆண்டாக இந்த மாநாட்டை நடத்துகின்றன.

வரும் 4-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சா்வதேச மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்று சமகால மருத்துவத் தொழில்நுட்பம், சிகிச்சை முறைகள், பரிசோதனை மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளனா். மறைந்த டாக்டா் ரங்கபாஷ்யம் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிகிச்சைகளில் பல்வேறு உத்திகளையும், மருத்துவ நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியவா்.

அவரது வழிதொட்டு தற்போது உள்ள மருத்துவ முறைகள் வரை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

டாக்டா் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன், அமெரிக்க மருத்துவப் பேராசிரியா்கள் ஸ்டீவன் வெக்ஸ்னா், எம் பொ்ஹோ, ஸ்பெயின் மருத்துவப் பேராசிரியா் அன்டோனியோ லேசி, பிரிட்டன் மருத்துவ வல்லுநா் மணீஷ் சந்த் உள்ளிட்டோரின் சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் துணை செயல் தலைவா் பிரீத்தா ரெட்டி, டாக்டா் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com