புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம்: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். 
புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம்: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இன்று(03-09-2022) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தென்மண்டல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 

தென்மாநிலங்களில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலைமை, உட்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. புதுச்சேரி சார்பில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர், புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல்.

விமான நிலைய விரிவாக்கம். புதுச்சேரியின் நீர் தேவைக்காக இந்திராவதி-கிருஷணா-பெண்ணை-காவிரி நதிகளை இணைப்பு மற்றும் கோதாவரி-வராகநதி-தென்பெண்ணை நதிகள் இணைப்பு. தமிழ்நாடு வழியாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருதல் உள்ளிட்ட விவகாரங்களை விவாதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com