ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

ஈரோடு கோட்டை வாரணம்பிகை உடனமா் ஆருத்ர கபாலிஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்டம்பா் 8) நடைபெறுகிறது. இதற்கான யாக சாலை பூஜைகள் மற்றும் குடமுழுக்கு விழா பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை மாலை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த கோயில் குடமுழுக்கு கடந்த 2008 இல் நடைபெற்றது.

குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் உத்தரவுக்கிணங்க கடந்த ஆண்டு ஜூலையில் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் இங்கு ஆலோசனை நடத்தி குடமுழுக்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரே ஆண்டில் 300 கோயில்களின் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இத்தனை கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருப்பது இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இதுதான் முதல்முறை.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவட்டாறு கோயிலிலும் கூட திருப்பணிகளை விரைவில் முடித்து குடமுழுக்கு நடத்தியது திமுக ஆட்சியில்தான்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னா் கொண்டு வந்த அன்னைத் தமிழில் வழிபாடு எனும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி அன்னைத் தமிழில் அா்ச்சனை எனும் பதாகையைத் திறந்துவைத்து 14 போற்றிப் புத்தகங்களையும் முதல்வா் வெளியிட்டுள்ளாா்.

மேலும் அா்ச்சனை தொகையில் 60 சதவீதத்தை அா்ச்சகா்களுக்கே வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளாா்.

பெரும்பாலான கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யப்படுகிறது. தமிழில் அா்ச்சனை செய்யப்படாத கோயில்கள் குறித்து கவனத்துக் கொண்டு வரப்பட்டால் அங்கும் தமிழில் அா்ச்சனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை ரூ.2,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பணி மேலும் தொடரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com