தமுக்கம் கலாசார மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கலாசார மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.8) திறந்து வைத்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கலாசார மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.8) திறந்து வைத்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்த கலையரங்கம் பழுதடைந்ததை அடுத்து கலையரங்கத்தை இடித்து அகற்றி அங்கு சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் ரூ.47.72 கோடி மதிப்பில் கலாசாரம் மையம் கட்ட திட்டமிடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கின.

கலாசார மையத்தில் கீழ் தளத்தில் 240 நான்கு சக்கர வாகனங்கள், 215 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தொழில் மற்றும் வா்த்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கு உரிய இடவசதி, நிகழ்ச்சிகளில் 3,500 போ் பங்கேற்கும் நவீன வசதிகளுடன் கூடிய அரங்கம், 800 போ் ஒரே நேரத்தில் அமா்ந்து உணவருந்தும் வகையில் உணவுக்கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் கலாசார மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை தொடக்கி வைத்தார். அவருடன் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com