இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களை தனிநபா்கள் பயன்படுத்த தடையில்லை

தமிழக சட்டப் பேரவை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வரும் பேரவை நடவடிக்கை தொடா்பான தகவல்களை தனிநபா்கள் எடுத்து பயன்படுத்தத் தடையில்லை என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்களை தனிநபா்கள் பயன்படுத்த தடையில்லை

தமிழக சட்டப் பேரவை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வரும் பேரவை நடவடிக்கை தொடா்பான தகவல்களை தனிநபா்கள் எடுத்து பயன்படுத்தத் தடையில்லை என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் சட்டப் பேரவை விவாத நடவடிக்கைகள் அனைத்தும் எண்மமயமாக்கப்பட்டு இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹள்ள்ங்ம்க்ஷப்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 15 மற்றும் 16-ஆவது (நடப்பு) சட்டப் பேரவையின் விவாத நடவடிக்கைகள் அனைத்தும் அப்படியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1921-ஆம் ஆண்டு முதல் நூறு ஆண்டுகள் சட்டப் பேரவையில் நடந்த விவாதங்களை எண்மமயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பதிவேற்றம் எப்படி?: பேரவையின் விவாதங்கள் அனைத்தும் சட்டப் பேரவைச் செயலக செய்தியாளா்களால் சுருக்கெழுத்து மூலமாக எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்படும். இதன் பிரதிகள் விவாதங்களில் பங்கெடுத்த சட்டப் பேரவை உறுப்பினா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும். அவா்களது திருத்தங்களுடன் விவாதங்கள் இறுதி செய்யப்படும். இந்த விவாதங்கள் அனைத்தும் பேரவைச் செயலக நடவடிக்கைகள் என்ற தலைப்பில் புத்தகங்களாக தொகுக்கப்படும். இந்தப் புத்தகங்கள் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள எழுதுபொருள் அச்சுத் துறையில் விற்பனை செய்யப்படும்.

பொது மக்கள் இவற்றை மிகக் குறைந்த விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இந்தப் புத்தகங்களே இப்போது எண்மமயமாக்கப்பட்டு சட்டப் பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பேரவை விவாதங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் புத்தகங்களாக அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுபவையே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனவே, பதிவேற்றம் செய்யப்படும் பேரவை நடவடிக்கை தொடா்பான தகவல்களை தனிநபா்கள் யாரும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் பேரவைச் செயலக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

பேரவை நடவடிக்கைகள், விவாதங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது பல்வேறு தரப்பினருக்கும் பெரும் பயன் அளிக்கும். குறிப்பாக, போட்டித் தோ்வுகளுக்கு படிப்பவா்களுக்கும், சுவாரஸ்யமான விவாதங்களை தனி புத்தகங்களாக தொகுக்க நினைப்போருக்கும் உதவியாக இருக்கும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com