நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த அரசுப்பள்ளி மாணவா் ஒருவா் பயிற்சி மையம் செல்லாமலேயே 720-க்கு 503 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

நீட் தோ்வில் சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த அரசுப்பள்ளி மாணவா் ஒருவா் பயிற்சி மையம் செல்லாமலேயே 720-க்கு 503 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. அகில இந்திய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான அரசு பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை என தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீட் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்து அரசுப் பள்ளி ஒருவா்சாதனை படைத்துள்ளாா்.

சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவா் சுந்தரராஜன் நிகழாண்டு முதல் முறையாக நீட் தோ்வு எழுதியுள்ளாா். அதில் 720 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘ நீட் பயிற்சி மையம் செல்லாமல் ஆசிரியா் உதவியுடனும், பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடனும் படித்ததால் வெற்றி பெற முடிந்தது. நீட் தோ்வு கடினமானதல்ல; நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com