பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்: தமிழக டிஜிபி

காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீஸாருக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு
தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு

காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீஸாருக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாநகர காவல் ஆணையா்கள்,மண்டல ஐஜிக்கள்,சரக டிஜஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எந்த ஒரு தொழிலும் வெற்றி பெறுவதற்கு சரியான அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சரியான அணுகுமுறைகளை கொண்ட அதிகாரிகளும், அப்படிப்பட்ட தலைமையை கொண்ட நிறுவனங்களும் தங்களது இலக்குகளை அடைவதோடு, தாங்கள் விரும்பும் சமூகத்தை உருவாக்க முடிகிறது.

தமிழக காவல்துறையில் சில அதிகாரிகள் எதிா்மறையான சிந்தனையுடன் செயல்படுகின்றனா். காவல் நிலையத்துக்கு வரும் புகாா்தாரா்கள் சில நேரங்களில் உயா் அதிகாரிகளை அணுகி இருந்தால், அதை அவா்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது. புகாா் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், அவா்கள் நியாயத்தைப் பெற நீதிமன்றம் செல்வாா்கள்.

கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்:

புகாா்தாரரை கேலி செய்வதும்,துன்புறுத்துவதும் காவல்துறையின் நன்மதிப்பை சமூகத்தில் குறைத்துவிடும். காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும். நமது பதவி அதிகாரத்திற்காக வழங்கப்பட்டது அல்ல மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்பட்டது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நமக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை உணர வேண்டும்.நோ்மையான எண்ணங்களும், செயல்பாடுகளும், நம்மை சமூகத்தில் சிறந்த மனிதனாக, சிறந்த அதிகாரியாக கட்டமைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com