மேட்டூர் அணை நீர்வரத்து 65,000 கன அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து 2-அம நாளாக வினாடிக்கு 65,000 கன அடியாக நீடித்து வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர் அணை நீர்வரத்து 2-அம நாளாக வினாடிக்கு 65,000 கன அடியாக நீடித்து வருகிறது. 

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்து வருவதால் நேற்று பிற்பகலில்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கன அடியாகக் குறைந்தது. இன்று 2-வது நாளாக நீர் வரத்து 65,000 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து வினாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 42,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலைமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com