செப்.15ல் மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் வெளியீடு!

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடவுள்ளார். 

தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து முழங்கி வருகிறார்.

இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தைத் தொகுத்து திமுக தலைமைக் கழகம் சார்பில் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 144 பக்கம் கொண்ட இந்நூலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. 

விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘திராவிட மாடல்’ நூலை வெளியிடுகிறார்.

கழகப் பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு முதல் நூலை பெற்றுக் கொள்கிறார். தமிழகத்தின் விடியலுக்கும், தமிழினத்தின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக அமையும் ‘திராவிட மாடல்’ கோட்பாட்டு புத்தகமானது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிந்தனைக் கொடையாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com