சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வுபெற்றார்.
முனீஸ்வா்நாத் பண்டாரி
முனீஸ்வா்நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வுபெற்றார்.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வா்நாத் பண்டாரிக்கு 62 வயதான நிலையில் இன்று ஓய்வுபெற்றார்.

பிரிவு உபசார நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ள நிலையில், ஓய்வுக்கு பிறகு அந்நிய செலவாணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவியேற்கவுள்ளார். 

இதற்கிடையே உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com