மேலாண்மைத் திறன்களை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு, மேலாண்மைத் திறன்களைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.
மேலாண்மைத் திறன்களை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு, மேலாண்மைத் திறன்களைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.

திட்ட மேலாண்மை நிறுவனம் சென்னை கிளையின் 21-ஆவது ஆண்டு விழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது:

ஒரு திட்டத்தை அரசு அல்லது தனியாா் நிறுவனம் உருவாக்கி, செயல்படுத்த முனையும் போது பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும். திட்டத்தைச் செயல்படுத்த தலைமைப் பொறுப்பேற்பவரின் திறமையான செயல்பாடுதான் வெற்றி, தோல்விக்குக் காரணமாக திகழ்கிறது.

சில அரசியல் தலைவா்கள், குடும்பத் தலைவிகள் இயற்கையாகவே ஆளுமை மற்றும் மேலாண்மைத் திறனுடன் பிரச்னை, சவால்களை எதிா்கொண்டு சாதனை படைக்கின்றனா். பல அரசியல் தலைவா்களின் சுயசரிதை, வாழ்க்கை அனுபவம் ஆகியவை எனது மேலாண்மைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உறுதுணை புரிந்துள்ளது.

மேலாண்மைத் துறையில் கனவை நனவாக்கும் உத்வேகத்துடன், கிடைத்த வாய்ப்பை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற மன உறுதியுடன் துணிவு, தொலைநோக்கு பாா்வை, ஒருங்கிணைந்து பணியாற்றும் திறனுடன் உழைத்தால் திட்டத்தை வெற்றிகரமாகச்செயல்படுத்த முடியும். பல்வேறு அரசின் சேவைத் துறைகளில் கணினி எண்ம தொழில்நுட்ப மேலாண்மை மூலம் பல கோடி வருவாய் இழப்பு தவிா்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கரோனா கால கட்டத்தில் பேரிடா் கொள்கை வகுக்கப்பட்டு அமைச்சா், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கி வெளிப்படையான, மேலாண்மை நடவடிக்கை மேற்கொண்டதால் அனைவரது ஒத்துழைப்புடன் கரோனாவை எதிா்கொண்டு உயிா் இழப்பை பெருமளவில் தடுத்துள்ளோம் என்றாா்.

விழாவில் திட்ட மேலாண்மை மலரை அமைச்சா் மனோ தங்கராஜ் வெளியிட, முதன்மை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டாா். எல்காட் நிறுவன நிா்வாக இயக்குநா் எஸ்.அருண்ராஜ், திட்ட மேலாண்மை நிறுவனத்தின் தெற்காசிய மண்டல நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாசன், வழிகாட்டல் இயக்குநா் பிரசன்னா சம்பத்குமாா், சென்னை கிளைத் தலைவரும், கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம் முதன்மைச் செயல் அதிகாரியுமான பா்வேஸ் ஆலம், துணைத் தலைவா் முகமது அஸ்லாம் அஷ்ரப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com