சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்

சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்றார்.
எம்.துரைசாமி
எம்.துரைசாமி

சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்றார்.

தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகத்தால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றுக் கொண்டார். வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதியுடன் இவர் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி எம்.துரைசாமி இளநிலை வணிகவியல் படிப்பை முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளாா். 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.வெங்கடாசலமூா்த்தியிடம் பயிற்சி பெற்று, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா்.

1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றி உள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2009-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நியமிக்கப்பட்ட எம்.துரைசாமி, 2011-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com