புதுச்சேரியில் மேலும் 82 பேருக்கு கரோனா

புதுச்சேரியில் இன்று 82 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 1,73,460 ஆக உயர்த்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுச்சேரி:  புதுச்சேரியில் இன்று 82 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இது யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 1,73,460ஆக உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

82 பேருக்கு தொற்று உறுதியாகிய நிலையில், புதுச்சேரியில் மட்டும் 72 நபர்களுக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், யானத்தில் 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

கடந்த 24 மணி நேரத்தில் 76 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,71,150 ஆக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் இறப்பு ஏதும் பதிவாகாத நிலையில், இதுவரை 23,89,203 மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 20,24,238 மாதிரிகள் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது என்று ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இதுவரை 21,46,032 தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில் 9,90,754 முதல் தவணையாகவும் 8,32,285 பேருக்கும் இரண்டாவது தவணையாக மீதம் உள்ள 3,22,993 பேருக்கும் பூஸ்டர் டோஸாகவும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com