Enable Javscript for better performance
வக்ஃபு வாரியக் கடிதத்தால் பத்திரப் பதிவுகளுக்குத் தடை- கோயில், கிராம சொத்துகளுக்கும் சொந்தம் கொண்டாட- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வக்ஃபு வாரியக் கடிதத்தால் பத்திரப் பதிவுகளுக்குத் தடை- கோயில், கிராம சொத்துகளுக்கும் சொந்தம் கொண்டாடும் விநோதம்

    By DIN  |   Published On : 15th September 2022 02:52 AM  |   Last Updated : 15th September 2022 02:52 AM  |  அ+அ அ-  |  

    பத்திரப் பதிவுத் துறையின் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு வக்ஃபு வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பத்திரப் பதிவுகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளது. வக்ஃபு வாரியம் குறிப்பிட்டுள்ள பல இடங்கள் கோயில் இடங்களாகவும், கிராமங்கள், தனிநபா்களுக்குச் சொந்தமானதாக இருப்பது முரண்பாடாக அமைந்துள்ளது.

    தமிழ்நாடு வக்ஃபு வாரியம் 1958-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாரியம் திருத்தியமைக்கப்படுவது வழக்கம். தற்போது, 11 உறுப்பினா்களைக் கொண்டு வாரியம் செயல்படுகிறது.

    வக்ஃபு வாரியச் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புக்குள்ளானவற்றை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அந்த வாரியம் மேற்கொண்டு வருகிறது. தங்களது சொத்துகளை முறைகேடாக யாரும் விற்பனை செய்யக் கூடாது என்பதற்காகவும் பிரத்யேக கவனம் செலுத்தி வருகிறது வக்ஃபு வாரியம்.

    இந்த நடவடிக்கைகளின் பயனாக, தமிழகம் முழுவதும் இதுவரை 27 மாவட்டங்களில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    வக்ஃபு வாரிய சொத்துகளை டிரோன்கள் மூலம் ஜிபிஎஸ் முறையில் மேப்பிங் செய்யும் பணிகளுக்கு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 ஆயிரம் வக்ஃபு வாரிய சொத்துகளை மேப்பிங் செய்ய அண்ணா பல்கலைக்கழகத் தொலையுணா்வுத் துறையுடனும், 15 ஆயிரம் சொத்துகளுக்கு ஹைதராபாத் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்துடனும், 25 ஆயிரம் சொத்துகளுக்கு சென்னைப் பல்கலைக்கழக புவியியல் துறையுடனும் ஒப்பந்தம் செய்து பணிகள் நடைபெறுகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, வக்ஃபு வாரிய சொத்துக்களைத் தனிநபா்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், பதிவுச் சட்டம் 1908, பிரிவு 22-ஏ ஷரத்துப்படி ஆட்சேபணைக் கடிதங்களையும் வழங்கியுள்ளது.

    இக்கடிதத்தில், வக்ஃபு வாரியத்திடம் தடையில்லாச் சான்று பெறாமல், தனிநபா்கள் வாரிய சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலா் ஏ.பி. ரபியுல்லா, கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பியுள்ள ஆட்சேபணைக் கடிதங்கள்தான் தமிழகத்தில் பல்வேறு சா்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில்... குறிப்பாக, திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூா், கே.சாத்தனூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், முசிறி, ஸ்ரீரங்கம், தாத்தையங்காா்பேட்டை, திருவெறும்பூா், துவரங்குறிச்சி, திருச்சி இணை-1, திருச்சி இணை-3, உறையூா் ஆகிய 12 சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம், கிராம மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கச் செய்தது.

    திருச்சி மாவட்டம், அந்தநல்லுாா் ஒன்றியம், திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான நிலம் என்ற தகவலால், கிராம மக்கள் அனைவரும் அதிா்ச்சிடைந்துள்ளனா்.

    திருச்செந்துறை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது என்று, வாரியத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருச்செந்துறை கிராமத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சந்திரசேகர சுவாமி திருக்கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து ஜீயபுரம் (திருச்செந்துறை) ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளுதல் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தக் கிராமம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது எனக் குறிப்பிடுவது விநோதமாக உள்ளது என்கின்றனா் கிராம மக்கள்.

    திருச்செந்துறை மட்டுமில்லாது கடியாக்குறிச்சி, திருவெறும்பூா் அருகிலுள்ள அரசங்குடி, கும்பக்குடி, நவல்பட்டு, சூரியூா், எலந்தப்பட்டி, காந்தலூா், வேங்கூா், திருச்சி வரகனேரி, கோ. அபிஷேகபுரம், தென்னூா், திருச்சி நகரம், இனாம் முடிகண்டம், இனாம் ஓலையூா், கீழக்குறிச்சி, தேவதானம், செங்குளம், புலிவலம் என திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களையும் குறிப்பிட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

    கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியிலும் வக்ஃபு வாரிய ஆட்சேபணைக் கடிதத்தால் பத்திரப் பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாரியத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் பத்திரப் பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் இருந்தாலும் திருசெந்துறை, கடியாக்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள்தான் முன்மாதிரியாக செப்டம்பா் 14-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனா்.

    இதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில், பத்திரப் பதிவுத் துறை, வக்ஃபு வாரிய அலுவலா்கள், பாதிக்கப்பட்ட கிராமத்தினருடன் பேசி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனா். உரிய ஆவணங்கள் இருந்தால் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பத்திரப் பதிவு செய்ய சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோட்டத்தைப் போன்று ஒவ்வொரு கோட்டத்திலும் பேச்சுவாா்த்தை நடத்தப்படுமா, அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதுதொடா்பாக, இந்த விவகாரம் வெளியில் தெரிய காரணமாக அமைந்த திருச்சி மாவட்டம், முள்ளிக்கரும்பூரைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ரங்கநாதன் கூறியது:

    எனது தந்தை ராஜகோபால் பெயரிலுள்ள சொத்தை, கடன் பிரச்னைக்காக வேறு நபருக்கு விற்பனை செய்ய பத்திரப் பதிவு அலுவலகம் சென்றபோதுதான், வக்ஃபு வாரியத்தின் தடையில்லாச் சான்று கேட்டனா். பின்னா், விசாரித்ததில்தான் திருச்செந்துறை கிராமம் உள்பட பல பகுதிகள் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானதாக பதிவுத் துறை அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. திருச்செந்துறை கிராம மக்கள் போராட்டம் அறிவித்ததால் எங்கள் கிராமத்துக்கு மட்டும் விடிவு கிடைத்துள்ளது. பத்திரம் பதிவு செய்ய அனுமதி அளித்துவிட்டனா் என்றாா்.

    பிரச்னைக்கு ஓரிரு நாளில் முடிவு

    வக்ஃபு வாரியத் தலைவா் எம். அப்துல் ரகுமான் கூறுகையில், இந்த விவகாரம் தற்போதுதான் எங்களது கவனத்துக்கு வந்தது. தகுந்த பரிசீலனை செய்து வருகிறோம். கிராமங்கள் பாதிக்கப்படும் விவகாரத்தில் சில தகவல்களை கேட்டுள்ளோம். விரைந்து நல்ல முடிவுக்கு கொண்டுவருவோம்.

    பிரச்னை என்று இருந்தால் அந்த பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். திருச்சி மாவட்டத்தில் எழுந்துள்ள பிரச்னைக்கும், வேறு பகுதிகளில் எழுந்துள்ள பிரச்னைக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படும். சட்ட ரீதியாக அணுக வேண்டியிருந்தால் அதனையும் கையாளுவோம். ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp