கியூட் தேர்வு முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியீடு!

கியூட் முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET)-UGக்கான முடிவுகள் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டிற்கான கியூட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகங்களில் நடைபெற்றது. 

தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவிகித மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. 

கியூட் தேர்வின் உத்தேச வினைக்குறிப்பைத் தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த உத்தேச விடைத்தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனைத் தேர்வர்கள் தேசிய தேர்வு முகமைக்கு(என்டிஏ) தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com