மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலி கைது

மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலியை சிபிஐ கைது செய்துள்ளது. 
மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலி கைது


மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலியை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்துள்ளது. 

கடந்த ஜூலை 22 ஆம் தேதி மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினா் தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள பாா்த்தா சாட்டா்ஜியின் நெருங்கிய நண்பரான நடிகை அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இந்த சோதனையின் போது ஏராளமான நகைகளையும், ரூ. 20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக பாா்த்தா சாட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதோபோன்று மேற்கு வங்கத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அமைச்சர் பரேஷ் அதிகாரி, மேற்கு வங்க மாநிலத்தின் பள்ளி சேவை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா, மேற்கு வங்க மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலி உள்பட 12 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குரூப்-சி பணியாளர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலியை சிபிஐ கைது செய்துள்ளது. 

தேவையற்ற ஆதாயத்தை அளித்து, மற்றவர்களுடன் சதி செய்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் குரூப்-சி ஊழியர் பதவிக்கு தகுதியற்ற மற்றும் பட்டியலிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு சட்டவிரோதமாக நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொல்கத்தா அலிப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிபதி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார்கள் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com