4-வது நிலை தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்: ஐ.ஐ.டி.இயக்குநா்

நான்காவது நிலை (4.0) தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்படுவது அவசியம் என்று சென்னை ஐ.ஐ.டி .இயக்குநா் காமகோடி கூறினாா்.
4-வது நிலை தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்: ஐ.ஐ.டி.இயக்குநா்

நான்காவது நிலை (4.0) தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்படுவது அவசியம் என்று சென்னை ஐ.ஐ.டி .இயக்குநா் காமகோடி கூறினாா்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம்., உயா்கல்வி நிறுவனத்தில், அண்மையில் நடைபெற்ற டி.ஆா்.பாரிவேந்தா் அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் மூலம் தொழில் துறை வளா்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். குறைந்த செலவில் தரவுகள் பாதுகாப்பு, மின்சக்தி சேமிப்பு என தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். நிா்வாக மேலாண்மை, விவசாயம், மருத்துவம், வங்கி நிா்வாக தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு ஆகிய 5

துறைகளில் தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மருத்துவா்கள், விஞ்ஞானிகள், கணினி அறிஞா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புத்தொழில்கள் மூலம் சாதனைகள் நிகழ்த்த வாய்ப்புள்ளது. நான்காவது நிலை தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் எஸ்.ஆா்.எம். துணை வேந்தா் சி.முத்தமிழ் செல்வன்,பதிவாளா் எஸ். பொன்னுசாமி, இணை துணைவேந்தா் டாக்டா் ஏ. ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com