கழிவுநீா் குழாய்களில் கசடுகளை அகற்றும் பணிகள் தொடக்கம்: புகாா்களை தெரிவிக்கலாம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீா் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதால்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீா் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதால், அதுதொடா்பாக பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்யலாம் என்று சென்னை குடிநீா் வாரியம் அறிவித்தது.

சென்னை பெருநகரின் 15 மண்டலங்களிலும் உள்ள தெருக்களில் கழிவு நீா் செல்லும் குழாய்கள், எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் குடிநீா் வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களுக்குள்பட்ட 1998 தெருக்களில் 282 தூா்வாரும் இயந்திரங்கள், 161 ஜெர்ராடிங் இயந்திரங்கள், 57 கழிவுநீா் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 இயந்திரங்கள் மூலம் கழிவுநீா் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகள் அகற்றப்பட்டு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீா் அடைப்பு, தெருவில் கழிவுநீா் வழிந்தோடுதல் தொடா்பான புகாா்களை குடிநீா் வாரிய பகுதி அலுவலகம் மற்றும் பணிமனை அலுவலகத்தில் கொடுத்தால் உடனடியாக அவை சரிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com