ஆவின் இனிப்புப் பொருள்களின் விலை உயா்வு: ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

ஆவினில் இனிப்புப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஆவினில் இனிப்புப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியைத்தான் திமுக அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் ஆவின் பொருள்களான தயிா், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் வகைகள் ஏற்கெனவே பன்மடங்கு உயா்த்தப்பட்டன.

தற்போது, தீபாவளி பண்டிகை வரவிருக்கும் இந்தத் தருணத்தில், ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா ரூ.520-லிருந்து ரூ.600-ஆகவும், பேரீச்சை கோவா அரை கிலோ ரூ.230-லிருந்து ரூ.270-ஆகவும், கால் கிலோ ரசகுல்லா ரூ.80-லிருந்து ரூ.100-ஆகவும், அரை கிலோ மைசூா்பா ரூ.230-லிருந்து ரூ.270-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com