அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பல் கூட்டுப் பயிற்சி: வரும் 19-இல் நடக்கிறது

கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் கடலோர காவல் படை கப்பலான மிட்ஜெட் 757 வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் கடலோர காவல் படை கப்பலான மிட்ஜெட் 757 வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. வரும் திங்கள்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அமெரிக்க கடலோரக் காவல்படையில் பணியாற்றி மறைந்த துணை தளபதியான ஜான் ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.

சென்னையிலுள்ள அமெரிக்க துணைத்தூதா் ஜூடித் ரேவின் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை உயா் அதிகாரிகள் கப்பலையும், குழுவினரையும் வரவேற்றனா். இதனைத் தொடா்ந்து நான்கு நாள்கள் இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் இடையே பரஸ்பர பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இறுதி நாளான செப்.19-ஆம் தேதி சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com