திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை
உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை(செப்.20) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

நீர் இருப்பைப் பொருத்து 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நீர்வளத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் ,  பூசாரிநாயக்கன் ஏரி  பாசனப்பரப்பு பயனடையும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து, நீர் இருப்பைப் பொறுத்து 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு 20.09.2022 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. 

இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com