சாலையில் மட்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள்! சொல்கிறது காவல்துறை

சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, நடந்து செல்பவர்களுக்கு எல்லாம் வழியே இல்லாத வகையில் மாறிவிட்டது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள்.
tpr14sproad_1409chn_125_3
tpr14sproad_1409chn_125_3


சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, நடந்து செல்பவர்களுக்கு வழியே இல்லாத வகையில் மாறிவிட்டன சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள்.

நடந்து செல்பவர்களும், சைக்கிளில் செல்வர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியிருப்பதற்குக் காரணம் வாகன நெரிசல்தான். குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து, நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

வாகன ஓட்டிகள், வாகனத்தை இயக்கும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்... அதுபோல, வாகனத்தை இயக்கும்போது மட்டுமல்ல, நடந்து செல்லும்போதும், பொது இடங்களிலும் கூட செல்லிடப்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்று ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, வாகனம் ஓட்டும் போது மட்டுமல்லாமல், பொது இடங்களிலும் சாலையிலும் நடந்து செல்லும் போதும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். நமது கவனம் செல்போனில் இருப்பதால் நமக்கு வரும் ஆபத்தை கூட கவனிக்காமல் விபத்தில் சிக்கிக்கொள்கிறோம் என்று பதிவிட்டு ஒரு விடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசியைப் பார்த்துக் கொண்டே சென்றதால், தனக்கு முன்னே இருந்த ஆபத்தைக் கூட அப்பெண் உணரவில்லை. எனவே, மக்களே வழக்கமாகச் செல்லும் வழிதானே என்று செல்லிடப்பேசியில் எதையாவது பார்த்துக் கொண்டேச் சென்றால் நிலைமை இப்படித்தான் விபரீதமாகிவிடும். எனவே உஷார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com