பள்ளிகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் இரு பாடவேளைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவா்கள் ஒன்றை தோ்வு செய்யலாம்.

கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞா்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மட்டுமின்றி மாணவா்களிடம் இருக்கும் தனித் திறன்களையும் வெளிப்படச் செய்து அதனை மேம்படுத்துவதற்காக இந்த செயல்பாடுகள் பள்ளி கால அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com