தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் ரூ.1,50,00,000 செலவில் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:

எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. பருவகால மாற்றங்களிலால் வரும் இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 அல்லது 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எச்1 ஏ1 காய்ச்சல் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.  ஏனென்றால் நீர்த்திவளைகள் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம்.

இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com