போலி கடவுச்சீட்டு வழக்கில் 41 பேர் மீது விசாரணை

போலி பாஸ்போர்ட் வழக்கில் மத்திய அரசு ஊழியர்கள் 14 பேர், தமிழக அரசு ஊழியர்கள் 5 பேர் உள்பட 41 பேர் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

போலி பாஸ்போர்ட் வழக்கில் மத்திய அரசு ஊழியர்கள் 14 பேர், தமிழக அரசு ஊழியர்கள் 5 பேர் உள்பட 41 பேர் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட அறிக்கை மதுரை கீழமை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கியு பிரிவு காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கீழமை நீதிமன்றத்தில் 41 பேர் மீதான விசாரணை தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு மதுரையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சில நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 27.09.2019 அன்று மதுரை நகர க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் 1967 ஆம் ஆண்டைய கடவுச்சீட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

புலன் விசாரணை அதிகாரிகள், 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆம் தேதிகளில் மதுரையில் இயங்கி வந்த நான்கு பயண முகவர்களின் அலுவலகங்கள் மற்றும்
அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். நான்கு பயண முகவர்கள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர். புலன் விசாரணையின் போது 124 கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டது. தொடர் புலன் விசாரணையில் 51 நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளனர் என்ற விபரமும் தெரிய வந்தது.

மேற்படி 175 கடவுச்சீட்டுகளில், 28 கடவுச்சீட்டுகளை இலங்கைத் தமிழர்கள் போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளனர் என்று இதுவரை தெரியவந்துள்ளது. அயத 28 கடவுச்சீட்டுகளில் 7 இலங்கை நபர்கள் மீது மதுரை நகர க்யூ பிரிவிலும் மீதமுள்ள 21 பேர் மீது சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் நகர க்யூ பிரிவுகளில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.


இந்நிலையில், வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com