தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது!

தமிழக அரசின் விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கான முந்தைய நாளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை(செப்.23) தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது!

தமிழக அரசின் விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கான முந்தைய நாளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை(செப்.23) தொடங்கியுள்ளது.

இந்தாண்டு அக்டோபர் 24 ஆம் தேதி(திங்கள்கிழமை) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வந்ததால், சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. ஆனால், இந்தாண்டு மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் முக்கிய நகரங்களுக்கு பணிக்கு திரும்பியுள்ளதால், பண்டிகைக்கு ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்ககூடும்.

சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்த நிலையில், தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு முன்பு பயணச்சீட்டு முன்பதிவு அக்.21ஆம் (வெள்ளிக்கிழமை) தேதிக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.21) ஆம் காலை தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு முந்தைய நாள் சொந்த ஊர்களுக்கு செல்ல (அக். 23) சனிக்கிழமைக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை(செப்.23) தொடங்கியுள்ளது. 

முன்பதிவு செய்வோர் www.tnstc.in என்ற இணையதளம், TNSTC செயலி மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com