மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்களா? 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தையின் குமுறல்

ரூ.30 ஆயிரத்துக்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்தும் இரண்டு பெண் குழந்தைகளை அடுத்தடுத்து பறிகொடுத்த தந்தையின் கதறல் காண்போரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. 
மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்களா? 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தையின் குமுறல்

ஏழைகளை ஏமாற்றி மருந்துகளை விற்க வர்த்தக ரீதியாக அரசு மருத்துவமனையை பயன்படுத்தும் மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தண்டிக்க வேண்டும் என  ரூ.30 ஆயிரத்துக்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்தும் இரண்டு பெண் குழந்தைகளை அடுத்தடுத்து பறிகொடுத்த தந்தையின் கதறல் காண்போரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் அருண்(28) இவர் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில்  புவனேஸ்வரி என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் கடந்த 8 ஆம் மாதம் ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் எடை குறைவாக உள்ளது என்கிற காரணத்தால் ஒரு  மாத காலமாக அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை இறந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அருண் சுமார் ரூ.30 ஆயிரத்துக்கு குழந்தையை காப்பாற்ற குழந்தை மருத்துவர் ஆலோசனையின் படி மருத்துவரின் சொந்த மருத்துவமனையில் இருந்து மருந்து மாத்திரைகளை வாங்கி வரச் சொல்லி பரிந்துரைத்துள்ளார்.

அதன் பின் மூன்று நாள்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை இறந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து குழந்தையை எப்படியாகினும் காப்பாற்றி விட வேண்டும் என்கிற தாகத்தில் கடன் வாங்கி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணியளவில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.  

ஆனால், மாலை 5 மணியளவில் பரிசோதித்த பொழுது திடீரென குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த அருண் மற்றும் அவருடைய மனைவி ரூ.30 ஆயிரத்துக்கு மருந்துகள் வாங்கி கொடுத்தும் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே, அதற்கு நான் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று இருப்போம் என்று அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கண்ணீருடன் கத்தி கதறினார்கள்.

மேலும், தலைமை மருத்துவமனை என்று நம்பி வருகின்ற எங்களை போன்ற ஏழைகளை ஏமாற்றி குற்றம் செய்கிற மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தண்டிக்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com