மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? ப.சிதம்பரம் தாக்கு

மதுரை எய்ம்ஸ்  மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சொல்லியிருக்கலாமே? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். 

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாவும், இதற்கான  பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், கூடுதலாக, தொற்று நோய் பிரிவுக்கு ரூ.164 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடன், 250 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளுடன் அமையவிருக்கிறது என்று பேசினார். 

அதிர்ச்சியடைந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள், 95% கட்டி முடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என கேள்வி எழுப்பியவர்கள், இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்ததை ஏமாற்றுகிறது, வஞ்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றவர்கள், இதே நிலைதான் மதுரை விமான நிலையத்திற்கும் ஒரு பைசா கூட ஒதுக்காமல், ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். 


 
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலாக ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். 

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?

பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள்தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? 

மேலும், பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என்று ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com