சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை: தலைமைக் காவலர் சாட்சியம்!

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையில் தந்தை- மகனை அடிக்கப் பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை  அடையாளம் காட்டி தலைமை காவலர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். 
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை: தலைமைக் காவலர் சாட்சியம்!

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையில் தந்தை- மகனை அடிக்கப் பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை  அடையாளம் காட்டி தலைமை காவலர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை- மகன், ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.

அப்போது  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும்  நேரில் ஆஜராகினர். 

வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அடிக்கப் பயன்படுத்திய லத்தி மற்றும் சிலம்பு கம்பு போன்றவற்றை நீதிபதி முன்பு அடையாளம் காட்டினார்.

அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவலர் முத்துராஜாவின் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ஆய்வாளர் ஶ்ரீதர் ஆகியோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. 

இதனையடுத்து எதிரிகள் தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வரும் 26 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com