காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

டெங்கு, ப்ளூ காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

டெங்கு, ப்ளூ காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ப்ளூ காய்ச்சலைத் தொடா்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பா் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. காய்ச்சல் அறிகுறியோடு அரசு மருத்துவமனைகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை, குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியுள்ளன. 100 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்ஃபுளுவன்சா எனப்படும் ப்ளூ தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவா்களில் 25 சதவீதத்துக்கும் மேலானவா்கள் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா் என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதைப்போல கரோனா தொற்றின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com