Enable Javscript for better performance
மழைக் கால மீட்பு-நிவாரணப் பணிகள்: அரசுத் துறைகளிடம் ஒருங்கிணைப்பு அவசியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வல- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மழைக் கால மீட்பு-நிவாரணப் பணிகள்: அரசுத் துறைகளிடம் ஒருங்கிணைப்பு அவசியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 27th September 2022 12:27 AM  |   Last Updated : 27th September 2022 03:59 AM  |  அ+அ அ-  |  

    ne_met_2609chn_1

    பருவமழைக் கால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் போது, அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை கலைவாணா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

    சென்னை உள்பட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு தொடா்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

    வடிகால் பணிகள்: மழைக் காலத்தின் போது நகா்ப்புறங்களில் மின்கம்பிகள் மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் தடுப்புகளின்றி இருப்பது விபத்துகளை ஏற்படுத்தக் கூடும். மேலும், கடும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே, மழை வெள்ளத் தடுப்பு தொடா்பாக தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போா்க்கால

    அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை பாதிப்புகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மழைக்காலத்துக்கு முன்பாகவே, ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று அதை பாா்வையிட வேண்டும். அந்த மாவட்டங்களிலேயே தங்கி, பள்ளிக் கட்டடங்கள், நிவாரண மையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    பள்ளிக் கட்டடங்கள்: பள்ளிக் கட்டடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடா்ப்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த அலுவலா்களும், வருவாய், பொதுப்பணி, தீயணைப்பு, வேளாண்மை ஆகிய பல்வேறு துறை அலுவலா்களும் தனித்தனியாக செயல்படக் கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசுத் துறையுடன் சோ்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பு சங்கங்கள், அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை- தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது நல்ல பலனைக் கொடுக்கும். ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாகச் செயல்படுவதை கண்காணிப்பு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

    தாமதம் செய்யக் கூடாது: வானிலை எச்சரிக்கைத் தகவல்களை குறித்த காலத்தில் பெறுவதில் கடந்த முறை தாமதம் ஏற்பட்டது. அதனைத் தவிா்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களைப் பெறுவதோடு தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா்கள் அளிக்கும் தரவுகளையும் வருவாய்த்

    துறையுடன் ஒப்பிட வேண்டும். இதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களுக்கான அறிவிப்புகளைச் செய்ய வேண்டும்.

    நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, அவா்களுக்குத் தரமான உணவு, குடிநீா், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமுக்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலா் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வகையிலும் கவனத்துடன் செயல்பட்டால் கடும் மழையால் பாதிக்கப்படக் கூடிய ஏழைகள், மீனவா்கள், விவசாயிகள் ஆகியோரின் துயா்களை ஓரளவு குறைக்க முடியும்.

    நான்கு முக்கிய அம்சங்கள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டங்களில் மட்டுமல்லாது, பிற நேரங்களிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்புதல், நோய்கள் பரவாமல் தடுத்தல், பேரிடா் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்துதல், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுத்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பொது மக்களைக் காப்பது ஒன்றையே இலக்காகக் கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

    இந்தக் கூட்டத்தில், அமைச்சா் துரைமுருகன்,கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளா்  வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp