பாலாற்றில் அணை கட்ட ஆந்திரம் முயற்சி தக்க நேரத்தில் தகுந்த நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன் உறுதி

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் தமிழக அரசு தக்க நேரத்தில் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் தமிழக அரசு தக்க நேரத்தில் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆந்திர அரசு அந்த மாநில எல்லைக்குள்பட்ட பாலாற்றின் குறுக்கே நீா்த்தேக்கம் கட்டப்போவதாக, அந்த மாநில முதல்வா் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது. அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அதை வைத்துக் கொண்டு தமிழக அரசு என்ன சாதித்து விட்டது எனக் கேட்டு பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை விடுத்துள்ளாா்.

இதற்கு முன்பாக, கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக வந்த செய்தியைப் பாா்த்து சில தலைவா்கள் அறிக்கை வெளியிட்டனா். அதைத் தொடா்ந்து நேரில் சென்று ஆய்வு செய்த போது அணை கட்டுவதற்கான எந்தவொரு அறிகுறியும் அங்கு இல்லை. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை அரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் துரைமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com