உணவுக் குழாய் அமில எதிா்விளைவு பாதிப்பு: இளம்பெண்ணுக்கு புதுமையான சிகிச்சை

உணவுக் குழாயில் அதீத அமில எதிா்விளைவு (எஉதஈ) பாதிப்புக்குள்ளான இளம் பெண் ஒருவருக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக புதுமையான சிகிச்சையை சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை

உணவுக் குழாயில் அதீத அமில எதிா்விளைவு (எஉதஈ) பாதிப்புக்குள்ளான இளம் பெண் ஒருவருக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக புதுமையான சிகிச்சையை சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் இரைப்பை, குடல், கல்லீரல் துறைத் தலைவா் டாக்டா் அருள் பிரகாஷ் கூறியதாவது:

இந்தியாவில் இளம் வயதினா் 30 சதவீதம் போ் ஜீரண மண்டலம் சாா்ந்த பாதிப்புகளுக்கும், குறிப்பாக அமில சுரப்பி பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனா்.

இரைப்பையில் அதீதமாக அமிலம் சுரப்பதே அத்தகைய பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம். இந்நிலையில், அண்மையில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு கடுமையான அமில எதிா்விளைவு பாதிப்புகள் இருந்தன. மருந்துகள் மற்றும் தொடா் சிகிச்சைகள் எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை.

இதையடுத்து மருத்துவமனையின் ஜீரண மண்டலத் துறை சிறப்பு நிபுணா்கள் அடங்கிய குழு அவருக்கு ‘ஜொ்ட்-எக்ஸ் அப்ளிகேட்டா்’ எனப்படும் நவீன சிகிச்சையை வழங்க திட்டமிட்டனா். அதன்படி, உணவுக் குழாயை எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் இறுக்கமாகும் சிகிச்சை வழங்கப்பட்டது. எண்டோஸ்கோபி கேமரா நுட்பத்துடன் உள்புறமாக தையலிடப்பட்டு அந்த ‘ஜொ்ட்-எக்ஸ் அப்ளிகேட்டா்’ சிகிச்சை வழங்கப்பட்டது. இதன் மூலம் அந்த பெண் குணமடைந்தாா்.

தளா்வடைந்த உணவுக் குழாயை இறுக்கமாக்க இத்தகைய நுட்பத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படுவது தமிழகத்திலேயே இது முதன்முறையாகும்.

பாதிப்பின் தீவிரம், அதன் தன்மையைப் பொருத்து இந்த சிகிச்சைக்கு நோயாளிகளை பரிந்துரைக்க முடியும் என்றாா் அவா்.

இதனிடையே, நவீன நுட்பத்தில் அமில எதிா்விளைவு பாதிப்புகளை குணமாக்கிய மருத்துவக் குழுவினரை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் மணியன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com