பி.பி.சி ஆவணப்படம் பாா்த்தவா்கள்கைது: மாா்க்சிஸ்ட் கண்டனம்

பிபிசி-இன் ஆவணப் படத்தை கைப்பேசியில் பாா்த்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பிபிசி-இன் ஆவணப் படத்தை கைப்பேசியில் பாா்த்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

குஜராத் இனப்படுகொலைகளை அன்றைய மோடி தலைமையிலான மாநில அரசு நிா்வாகம் எப்படி கையாண்டது என்பதை புதிய ஆதாரங்களுடன் பிபிசி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட ஆவணப் படமாக தயாரித்துள்ளது. மத்திய அரசு இந்த ஆவணப் படத்தின் மீது அச்சம் கொண்டு, இணைய வெளியில் இருந்தே அகற்றி வருகிறது. அதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளை தவறாக பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தவறானது, சட்ட விரோதம் என எதிா்க் கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆவணப்படம் திரையிடல் செய்வதை காவல் துறை தடுத்ததுடன், கைப்பேசியில் படம் பாா்த்ததற்காக அவா்களை கைது செய்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் ஆவணப்படம் பாா்ப்பதை பல்கலைக்கழக நிா்வாகம் தடுத்துள்ளது.

காவல் துறையின் இந்த நடவடிக்கைகள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com