மன்னார்குடி அருகே பொதுமக்கள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

மன்னார்குடி அருகே புதிய வட்டத்துடன் 4 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுமக்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுமக்கள்.

மன்னார்குடி அருகே புதிய வட்டத்துடன் 4 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை புதிதாக தொடக்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துன் இணைக்கப்பட்டதை கண்டித்து செவ்வாய்க்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பொதுமக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு ஊராட்சிகளும் இதுநாள் வரை மன்னார்குடி வருவாய் வட்டத்துடன இணைந்து இருந்தது. அண்மையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து இந்த நான்கு ஊராட்சிகளும் புதிய வட்டத்துடன் இணைக்கப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்து  களப்பாலில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்து  களப்பாலில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஆரம்பம் முதலே இந்த நான்கு ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், அரசுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்துடன், முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என அந்தஅந்த ஊராட்சி கூட்டத்தலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில்,  இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில் களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி முத்துப்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த நான்கு ஊராட்சிகளை மன்னார்குடி வருவாய் வட்டத்துடன் இணைந்து இருக்க வேண்டம் அல்லது திருத்துறைப்பூண்டி வருவாய் வட்டத்துன் இணைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தில் சேர்க்கக கூடாது என வலியுறுத்தி களப்பால் கடைவீதியில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இணைந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஊராட்சி தலைவர்கள் பா.சுஜாதா(களப்பால்), கே.எம்.அறிவுடைநம்பி(குறிச்சிமூலை), சி.திலகவதி(வெங்கத்தான்குடி), கு.புவனேஸ்வரி (குலமாணிக்கம்) ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

போராட்டக்குழுத் தலைவர் ஏ.கே.ஜி.சிவராமன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். செயலர் கே.முரளிதாஸ், பொருளாளர் வி.சிவசாமி முன்னிலை வகித்தனர்.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பா.சாந்தி, ம.சாந்தி, வி.மாரியப்பன், வர்த்தக சங்க மாவட்ட துணைச் செயலர் தங்க.முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நான்கு ஊராட்சி பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வர்த்தகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com