கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை காலை 8 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த பேரணியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com