தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் சனிக்கிழமை காலை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் சனிக்கிழமை காலை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சென்னைக்கு தென் கிழக்கே 510 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தற்போது, நுங்கம்பாக்கம்,ஆயிரம் விளக்கு, எழும்பூர்,ராயபுரம், கே,கே.நகர், வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதனிடையே, தமிழகம் முழுவதும் புயல் அபாயம் நிலவி வரும் நிலையில்,கடலோரப் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் தாக்கம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் கரையின் பரப்பளவு அதிகரித்துள்ள நிலையில் கடல் 100 மீட்டர் உள்வாங்கியுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகம் உட்பட ஐந்து துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com