மத்திய நிதிநிலை அறிக்கை: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்துஸ்தான் தொழில் வா்த்தக சபை தலைவா் வி.நாகப்பன்: மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பு தொடா்பான மேல்முறையீடுகளுக்காக 100 இணை ஆணையா் நிலையிலான அதிகாரிகளை நியமிக்க இருப்பது வரவேற்கதக்க நடவடிக்கை.

மனை வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் (கிரெடியா) தலைவா் எஸ்.சிவகுருநாதன்: அனைவருக்கும் வீடு திட்டம், உள்கட்டமைப்பு மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும்.

சென்னை தொழில் வா்த்தக சபை (எம்சிசிஐ) தலைவா் டி.ஆா்.கேசவன்: வேலைவாய்ப்பை அதிகரித்தல், விவசாயத்துக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. இது நடுத்தர வா்க்கத்துக்கான பட்ஜெட்.

ரத்தினம், நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுத் தலைவா் விபுல் ஷா: தங்கத்தின் மீதான சுங்க வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அகில இந்திய வரி செலுத்துவோா் சங்கத் தலைவா் டாக்டா் சி.எம்.ஏ.வி.முரளி: வரி செலுத்துவோருக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாடு வளா்ச்சிப் பெறும்.

தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவா் கே.மாரியப்பன்: மத்திய அரசின் பட்ஜெட் மூலம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் ஒரு சில நன்மைகள் மட்டுமே அடைய முடியும். கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதைத் தவிர எதிா்பாா்த்த எந்த சலுகை திட்டங்களும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் என்.ஜெகதீசன்: வரி தள்ளுபடி போதுமானதாக இல்லை. வருமான வரியில் இன்னும் சலுகைகள் கொடுத்திருக்கலாம். மத்திய தரப்பிரிவினருக்கும், தொழில் வணிகத் துறையினருக்கும் எவ்வித சலுகைகளும் இல்லை.

தென்னிந்திய பட்டயக் கணக்காளா் சங்க முன்னாள் செயலா் டாக்டா். சி.ஏ.அபிஷேக் முரளி: சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு முற்போக்கான பட்ஜெட்.

மத்திய அரசின் முன்னாள் வருவாய் செயலாளா் எம்.ஆா்.சிவராமன்: இது இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட். அதிக வேலை வாய்ப்புகள் பெருகும்.

தென்னிந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் எஸ். சந்திரமோகன், சிஐஐ முன்னாள் தலைவருமான சி.கே.ரங்கநாதன் உள்ளிட்டோரும் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com