
ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக 200 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:- அத்தியாவசியப் பொருள்களை சிலா் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனா். அத்தகைய நபா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 1991 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும், 146 லிட்டா் மண்ணெண்ணெய், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 59 வாகனங்களும் கைப்பற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட 200 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.