அதிமுக பொதுக்குழு விவகாரம்: 3வது நாளாக விசாரணை

ஓபிஎஸ் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் அதிமுக விதிகள் தமிழ் மொழியில் படித்துக்காட்டப்பட்டன. 
அதிமுக பொதுக்குழு விவகாரம்: 3வது நாளாக விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

இதில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் அதிமுக விதிகள் தமிழ் மொழியில் படித்துக்காட்டப்பட்டன. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ரஞ்சித் குமாா், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். 

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-இல் நடைபெற்றது. இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தாா்.

இதை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, தனிநீதிபதி அளித்த தீா்ப்பை ரத்து செய்தது. அத்துடன், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் கூறியது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com