ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
ராமதாஸ்
ராமதாஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிகாரில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கா்நாடகம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளா்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்த ஜாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனா். கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய அரசு ஆணையிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட் கம்யூ): தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு, செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் 26 நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்குப் போய்ச் சேருகிா என்பதை கண்டறியவே தனி அடையாள எண் உருவாக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியில் இது நல்ல விஷயம்தான். புதிதாக ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு அம்சங்கள் சரிவர கிடைக்கிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com