ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன. 13ல் போராட்டம்: விசிக அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். 
திருமாவளவன்
திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. மேலும் பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தன. 

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் சதி! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவை & தேசிய கீதத்தையும் ஆளுநர் அவமதித்துள்ளார்! ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார்! அவரைத் திரும்பபெற வலியுறுத்தி சன-13 ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com